search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்டுப்பாடு"

    ஆன்-லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் புகார் அளித்ததையொட்டி மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #CentralGovernment #OnlineShopping
    புதுடெல்லி :

    ஆன்-லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் பலர் அரசுக்கு புகார் செய்தனர்.

    இதன் எதிரொலியாக ‘பிளிப்கார்டு’, ‘அமேசான்’ போன்ற ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



    அதன்படி, ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. சில உற்பத்தி பொருட்களை ஆன்-லைனில் மட்டுமே விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

    ஒரு கம்பெனி ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுடனோ, அந்த நிறுவனங்களின் இதர குழுக்களுடனோ பங்குதாரராக இருந்தால் அந்த கம்பெனியின் உற்பத்தி பொருட்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு வருகிற பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. #CentralGovernment #OnlineShopping

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #GreenCard #TrumpAdministration
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முந்தைய ஒபாமா அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் குடியிருப்பதற்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



    இது தொடர்பாக அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, அரசுக்கு அளித்துள்ள ஆலோசனையில், அமெரிக்காவில் உணவு மற்றும் நிதி உதவி பெற்று வந்த பிற நாட்டினர் அல்லது பெற விரும்புகிற பிற நாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்க தேவையில்லை என்று கூறி உள்ளது. இந்த ஆலோசனையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்தால் இதுவும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தை பேஸ்புக், மைக்ரோசாப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என இவை தெரிவித்துள்ளன. #GreenCard #TrumpAdministration  
    ×